மிதிவண்டி மீது கார் மோதி கூலித் தொழிலாளி சாவு
சிவகங்கை மாவட்டம் விராமதி அருகே ஞாயிற்றுக்கிழமை மிதிவண்டி மீது கார் மோதி கூலித் தொழிலாளி உயிரிழந்தார்.
சிவகங்கை மாவட்டம் விராமதி அருகே ஞாயிற்றுக்கிழமை மிதிவண்டி மீது கார் மோதி கூலித் தொழிலாளி உயிரிழந்தார்.
திருப்பத்தூர் அருகே காட்டுவாபா பள்ளிவாசல் பகுதியைச் சேர்ந்தவர் பெரியகருப்பன் (55). கூலித் தொழிலாளி. இவர் ஞாயிற்றுக்கிழமை விராமதி சோதனைச் சாவடி அருகே சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது திருப்பத்தூரிலிருந்து வந்த கார் இவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த பெரியகருப்பன் சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். கீழச்சிவல்பட்டி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.