FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

அரசுப் போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்டம் சார்பில்செப்-8 இல் தேசிய மக்கள் நீதிமன்றம்

நிலுவை வழக்குகளுக்கு தீர்வு காணும் வகையில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் கும்பகோணம் கோட்டத்தில் செப்டம்பர் 8-ஆம் தேதி (சனிக்கிழமை) தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறவுள்ளது.

30 ஜனவரி 2024, 10:08 pm IST
பகிர்:

 நிலுவை வழக்குகளுக்கு தீர்வு காணும் வகையில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் கும்பகோணம் கோட்டத்தில் செப்டம்பர் 8-ஆம் தேதி (சனிக்கிழமை) தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறவுள்ளது.
இது குறித்து அதன் மேலாண்மை இயக்குநர் பி. ரவீந்திரன் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மாநில சட்டப் பணிகள் குழு சார்பில், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை மற்றும் அனைத்து  கீழமை நீதிமன்றங்களிலும் நிலுவையிலுள்ள வழக்குகளுக்கு சமரசத் தீர்வு காண தேசிய மெகா லோக்-அதாலத் நடைபெறவுள்ளது.
இதில், கும்பகோணம் கோட்டத்தில் மோட்டார் வாகன விபத்து வழக்குகள் மற்றும் இதர வழக்குகளுக்கு சமரசத் தீர்வு கண்டு சம்பந்தப்பட்டவர்கள் பயன்பெறலாம்.
இது தொடர்பாக கும்பகோணம் மண்டல அலுவலகத்தை 0435-2403724 - 26 என்ற தொலைபேசி எண்களிலோ, 94878-02399, 86675-90214 ஆகிய செல்லிடப்பேசி எண்களிலோ தொடர்பு கொள்ளலாம். 
திருச்சி மண்டல அலுவலகத்தை 0431-2415551-54, 94878-98057 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். காரைக்குடி மண்டல அலுவலகத்தை 04565-234125 - 26, 94878-98095, 63794-97617 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
    புதுக்கோட்டை மண்டல அலுவலகத்தை 04322 - 266111, 94878-98067 என்ற எண்களிலும் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments