அழகப்பா பல்கலை. இணைப்புக் கல்லூரி இளங்கலை பாடத் தேர்வு முடிவுகள் வெளியீடு
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரி இளங் கலை பாடப் பிரிவு மாணவர்களுக்கு 2018 ஏப்ரலில் நடைபெற்ற தேர்வுக்கான முடிவுகள் திங்கள்கிழமை வெளியிடப்பட்டன.
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரி இளங் கலை பாடப் பிரிவு மாணவர்களுக்கு 2018 ஏப்ரலில் நடைபெற்ற தேர்வுக்கான முடிவுகள் திங்கள்கிழமை வெளியிடப்பட்டன.
இளங்கலை பாடப் பிரிவுகளான பி.ஏ. தமிழ், ஆங்கிலம், வரலாறு, அரசியல் அறிவியல், பொருளியல், பி.காம்., பி.காம். (சி.ஏ), பி.காம். (சி.எஸ்) , பி.பி.ஏ. மற்றும் பி.பி.இ. ஆகிய பாடப் பிரிவுகளுக்கான தேர்வு முடிவுகள், அழகப்பா யுனிவர்சிட்டி.ஏசி.இன் என்ற பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
இதில், மறுமதிப்பீட்டுக்கு 7.7.2018-க்குள் விண்ணப்பிக்கலாம். இதற்குரிய விண்ணப்பம் பல்கலைக்கழக இணையதளம் மூலம் பெற்று மறுமதிப்பீட்டுக் கட்டணமாக பாடம் ஒன்றுக்கு ரூ. 500 பதிவாளர், அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி என்ற பெயரில் வரைவோலை செலுத்தி, தேர்வுப் பிரிவுக்கு விண்ணப்பிக்குமாறு பல்கலைக்கழகத்தின் தேர்வாணையர் பி. சக்திவேல் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.