FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

தட்டிக்கொடுங்க... தட்டி விடாதீங்க! தேசிய விருது சர்ச்சைக்கு தனுஷ் பதில்!

ராயன் தேசிய விருது குறித்து தனுஷ் பதில்...

Updated On : 26 ஜூலை 2026, 7:07 pm IST
ராயன் தனுஷ்
பகிர்:

நடிகர் தனுஷ் தன் திரைப்படத்துக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருது குறித்து பேசியுள்ளார்.

நடிகர் தனுஷ் இயக்கி, நடித்த திரைப்படமான ராயன் கடந்த 2024 ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி ரூ. 150 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வெற்றிப்படமானது. ஆனால், விமர்சன ரீதியாக நல்ல கருத்துகளைப் பெறவில்லை. கலவையான வரவேற்பையே பெற்றது.

தற்போது, அந்த ஆண்டிற்கான சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான தேசிய விருது ராயனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு விருதா? எனப் பலரும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

Advertisement

Advertisement

முக்கியமான அதே ஆண்டில் வெளியான மெய்யழகன், மகாராஜா திரைப்படங்களுக்கு கிடைக்கவில்லை. இதனையும் குறிப்பிட்டு ரசிகர்கள், திரைத்துறையைச் சார்ந்தவர்கள் ஆதங்கப்பட்டிருந்தனர்.

ராயன்

இந்த நிலையில், தன் பிறந்த நாளை (ஜூலை 28) முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய நடிகர் தனுஷ், “ராயனுக்குத் தேசிய விருது கிடைத்ததால் எழுந்த சர்ச்சையைக் கவனித்தேன். மெய்யழகன், மகாராஜா ஆகிய திரைப்படங்கள் ராயனைவிட சிறந்த படங்கள் என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால், என்னுடைய புதுப்பேட்டை, ராஞ்சனா, மரியான், வடசென்னை, கர்ணன் ஆகிய திரைப்படங்களுக்குத் தேசிய விருது கிடைக்காத போது, இதுகுறித்து யாரும் ஆதங்கப்படவில்லை.

இப்போது ராயனுக்குக் கிடைத்ததும் 90 சதவீதம் பேர் எதிராகக் கருத்து கூறுகின்றனர். இதில், 10 சதவீதம் கூட அன்று எனக்கு ஆதரவாக இல்லை. இம்முறை ராயனுக்கு அமைந்ததால் கிடைத்திருக்கிறது அவ்வளவுதான். தட்டிக்கொடுங்கள்; தட்டி விடாதீர்கள்.” எனக் கூறியுள்ளார். தனுஷின் இப்பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Actor Dhanush has spoken about the National Award announced for his film.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments