FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சிவகங்கை

திமுகவினர் கண்டன ஊர்வலம்- சாலை மறியல்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தைக் கண்டித்தும், ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும் சிவகங்கை மாவட்ட திமுக சார்பில் வியாழக்கிழமை கண்டன ஊர்வலம் மற்றும் சாலை மறியல்

Updated On : 25 மே 2018, 4:51 am IST
பகிர்:

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தைக் கண்டித்தும், ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும் சிவகங்கை மாவட்ட திமுக சார்பில் வியாழக்கிழமை கண்டன ஊர்வலம் மற்றும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
காரைக்குடி செஞ்சைப்பகுதியில் உள்ள மாவட்ட திமுக அலுவலகம் முன்பாக திமுகவினர் சிறிதுநேரம் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் சிவகங்கை மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சர் கேஆர். பெரியகருப்பன் தலைமையில் திமுகவினர் ஊர்வலமாக புறப்பட்டு 2-ஆவது போலீஸ் பீட் பகுதிக்கு வந்தனர். அங்கும் சாலை மறியல் நடத்தினர். அவர்களை போலீஸார் தடுத்து கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். பின்னர் சிறிது நேரத்தில் அனைவரும் கலைந்து சென்றனர்.
இளையான்குடி: இளையான்குடி கண்மாய்கரை பகுதியில் திமுக மேற்கு ஒன்றியச் செயலாளர் சுப.மதியசரசன் தலைமையில் அக் கட்சியினர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
இந்த மறியலால் அப் பகுதியில் போக்குவரத்து தடைபட்டது. மறியல் போராட்டத்தில் திமுக நிர்வாகிகள் ஆறு.செல்வராசன், புலிக்குட்டி, முருகா , சந்திரசேகர், பெரியசாமி, மலைமேகு,
அன்பரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். போலீôர் மறியல் செய்தவர்களை கைது செய்து வேனில் ஏற்றிச் சென்றனர்.
மார்க்சிஸ்ட் கம்யூ. சாலை மறியல்: 12 பேர் கைது: தூத்துக்குடியில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தைக் கண்டித்து
காரைக்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தாலுகாச் செயலாளர் தட்சிணாமூர்த்தி தலைமையில் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் காரைக்குடி பழைய பேருந்து நிலையம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் தடுத்து ஒரு பெண் உள்பட 12 பேரை கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments