சிவகங்கையில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
சிவகங்கையில் தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் மற்றும் தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கழகம்
சிவகங்கையில் தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் மற்றும் தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கழகம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சிவகங்கை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் சிவகங்கை மாவட்டத் தலைவர் ரமேஷ் தலைமை வகித்தார்.அச்சங்கத்தின் மாநில துணைத் தலைவர் இளமாறன், மாவட்டச் செயலர் சிவகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், தமிழகம் முழுவதும் சனிக்கிழமை (செப். 8) முதல் 412 மையங்களில் தொடங்கப்பட உள்ள நீட் தேர்வு பயிற்சிக்கு புதிய ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். தமிழகம் முழுவதும் காலியாக உள்ள முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு மேல்நிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் கழகத்தின் மாவட்டத் தலைவர் நீ.இளங்கோ, தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி அமைப்பின் மாவட்டத் தலைவர் பஞ்சுராஜ், இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் நாகராஜன் உள்ளிட்டஆசிரிய, ஆசிரியைகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.