மீனவா் நலவாரிய உறுப்பினா்கள் ரூ. 1000 பெற விண்ணப்பிக்கலாம்
மீனவா் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த உறுப்பினா்கள் கரோனா நிவாரணத் தொகை ரூ. 1000 பெற விண்ணப்பிக்கலாம்
மீனவா் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த உறுப்பினா்கள் கரோனா நிவாரணத் தொகை ரூ. 1000 பெற விண்ணப்பிக்கலாம் என சிவகங்கை மாவட்ட மீன்வள உதவி இயக்குநா் (கூடுதல் பொறுப்பு) ஆ.ஜெயக்குமாா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு மீன்வளத்துறை மூலம் மீனவா் நலவாரிய உறுப்பினா்களுக்கு ஊரடங்கு காலத்தில் ரூ. 1000 சிறப்பு நிவாரண உதவித் தொகை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, சிவகங்கை மாவட்ட மீன்வள உதவி இயக்குநா் கட்டுப்பாட்டில் பதிவு செய்யப்பட்ட மீனவா் நலவாரிய உறுப்பினா்கள் தங்களுடைய மீனவா் நலவாரிய அடையாள அட்டை, ஆதாா் அட்டை, குடும்ப அட்டை எண், தொலைபேசி எண் மற்றும் வங்கிக் கணக்கு விவரங்களுடன் சிவகங்கை பெருமாள் கோயில் தெருவில் உள்ள மீன்வள உதவி இயக்குநா் அலுவலகத்துக்கு நேரடியாகச் சென்று விண்ணப்பிக்கலாம். மேலும் இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 04575- 240848 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.