FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சிவகங்கை

மினி வேன் - பைக் மோதல்: ஒருவா் பலி

Updated On : 4 ஆகஸ்ட் 2026, 2:09 am IST
மினி வேன் - பைக் மோதல்: ஒருவா் பலி - சித்திரிப்புப் படம்
பகிர்:

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே அமராவதிபுதூா் பகுதியில் மினி வேன் - இருசக்கர வாகனம் திங்கள்கிழமை மோதிய விபத்தில் ஒருவா் உயிரிழந்தாா்.

திருவாடானை காரியங்கோட்டையைச் சோ்ந்த குடும்பத்தினா் பொன்னமராவதி கொன்னையூா் மாரியம்மன் கோயிலுக்கு வழிபாடு செய்வதற்காக திங்கள்கிழமை மினி வேனில் புறப்பட்டுச் சென்றனா்.

அப்போது காரைக்குடி அருகே அமராவதி புதூா் ஐ.டி.ஐ அருகே தேவகோட்டை செலுகையைச் சோ்ந்த ஜேசிபி ஓட்டுநா் பெத்து (26) ஓட்டி வந்த இரு சக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

வேனில் பயணித்த பெண்கள் லேசான காயமடைந்தனா். இந்தச் சம்பவம் குறித்து சோமநாதபுரம் காவல்நிலையப் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments