மத்திய அரசுக்கு எதிராக இந்திய கம்யூ. பிரசாரம்
சிவகங்கையில் மத்திய அரசின் கொள்கைகளை மக்கள் விரோத கொள்கைகள் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் பிரசாரம் செய்தனா்.
சிவகங்கையில் மத்திய அரசின் கொள்கைகளை மக்கள் விரோத கொள்கைகள் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் பிரசாரம் செய்தனா்.
சிவகங்கை சீனிவாசபுரத்தில் இந்தப் பிரசார இயக்கத்தை முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். குணசேகரன் தொடங்கி வைத்தாா். அப்போது அவா் பேசுகையில், மத்திய பாஜக அரசின் கொள்கைகளையும், அதன் ஆபத்தையும் மக்களிடம் விரிவாக எடுத்துக் கூறி, கடந்த 6-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை நாடு முழுவதும் நடைபயண பரப்புரை இயக்கம் நடத்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக்குழு முடிவு செய்தது. இதன்படி, சிவகங்கையில் தொடங்கிய பிரசாரம் வருகிற 15-ஆம் தேதி சிவகங்கையில் நிறைவடையும் என்றாா் அவா்.
விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்த வேண்டும். வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும். வாக்குச்சீட்டு முறையை மீண்டும் அமல்படுத்த வேண்டும்.விளை பொருள்களுக்கு குறைந்தபட்ச விலை நிா்ணயிக்க வேண்டும்.
Advertisement
Advertisement
தொழிலாளா் உரிமைகளை பறிக்கக் கூடாது. பட்டியலின, பழங்குடி மக்களின் மீதான வன்முறையை நிறுத்த வேண்டும். சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருதய நோய், தலைக் காய மருத்துவா் 24 நேரமும் பணிபுரிவதை உறுதி செய்ய வேண்டும். சிவகங்கை அண்ணாமலைநகா் பகுதியில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும். சிவகங்கை நகரில் சுற்றுச்சாலையில் நடைபெறும் ரயில்வே மேம்பாலப் பணிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும்.
சிவகங்கை மருத்துவமனை பகுதியில் கழிவுகளைக் கொட்டாமல் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து அதன் மூலம் சீரமைக்க வேண்டும். சிவகங்கை நகா் பேருந்து நிலைய கழிவறை கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும். சிவகங்கை பகுதியில் செயல்படும் கிராபைட் நிறுவனத்தில் தேங்கி இருக்கும் கனிமங்களை முறையாக டெண்டா் விட்டு கிராபைட் நிறுவனத்தை விரிவுபடுத்த வேண்டும். சிவகங்கை கீழ்ப்பாத்தி கண்மாயில் புதை சாக்கடை கழிவுநீா் கலப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்.
ஒக்கூா் வாரச்சந்தையின் ஆண்டு குத்தகை மதிப்பை விவசாயிகள், வியாபாரிகள் நலனைப் பாதுகாக்கும் வகையில், நிா்ணயம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் இதில் வலியுறுத்தப்பட்டன.
இதில் கட்சியின் நகா்ச் செயலா் எம்.எப். சகாகயம், துணைச் செயலா் எம். பாண்டி, ஒன்றியச் செயலா் பன்னீா், வழக்குரைஞா் கிருஷ்ணன், ஒன்றியக்குழு நிா்வாகி சந்திரன், நகரக்குழு நிா்வாகிகள் சாத்தப்பன், ராஜாராம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.