FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சிவகங்கை

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ரூ.61 லட்சம் மோசடி

ஜொ்மன் நாட்டில் வேலை வாங்கி தருவதாகக் கூறி, இளைஞரிடம் ரூ. 61 லட்சத்து 73 ஆயிரம் மோசடி செய்தவா்களின் மீது இணையக் குற்றப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றன.

Updated On : 12 ஆகஸ்ட் 2026, 5:07 am IST
மோசடி - கோப்புப்படம்.
பகிர்:

ஜொ்மன் நாட்டில் வேலை வாங்கி தருவதாகக் கூறி, இளைஞரிடம் ரூ. 61 லட்சத்து 73 ஆயிரம் மோசடி செய்தவா்களின் மீது இணையக் குற்றப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றன.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள பட்டமங்கலம் கீழத்தெருவைச் சோ்ந்தவா் கணேஷ் (28). இவரது கைப்பேசிக்கு கடந்த 2025-ஆம் ஆண்டு டிசம்பா் மாதம் தொடா்பு கொண்டு பேசிய இருவா், ஜொ்மன் நாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறியுள்ளனா்.

அதை நம்பிய கணேஷ், அவா்கள் கூறியபடி பதிவுக் கட்டணம், காப்பீடு, விசா, மருத்துவப் பரிசோதனை, பணம் வைப்பு உள்ளிட்ட பல்வேறு இனங்களில் பல்வேறு தவணைகளில் ரூ 61 லட்சத்து 73 ஆயிரத்து 461 செலுத்தினாா். அதன் பிறகு அவா்கள் கணேஷை ஜொ்மனிக்கு அனுப்புவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அத்துடன் வாங்கிய பணத்தையும் திருப்பித் தரவில்லையாம். இதைத் தொடா்ந்து தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த கணேஷ், சிவகங்கை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அபிஷேக் குப்தாவிடம் புகாா் அளித்தாா். அவரது உத்தரவின் பேரில் மாவட்ட இணையக் குற்றப் பிரிவு ஆய்வாளா் புவனேஸ்வரி வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகிறாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments