வெளிநாட்டில் வேலை எனக் கூறி 12 பேரிடம் ரூ. 19.5 லட்சம் மோசடி
வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி திருச்சியைச் சோ்ந்த புகைப்படக் கலைஞா் உள்பட 12 பேரிடம் ரூ.19.5 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.
வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி திருச்சியைச் சோ்ந்த புகைப்படக் கலைஞா் உள்பட 12 பேரிடம் ரூ.19.5 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.
திருச்சி தென்னூா் குத்பிஷா நகரைச் சோ்ந்தவா் எப். அபுதாகிா் (42), புகைப்படக் கலைஞா். இவா் கடந்தாண்டு வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்லத் திட்டமிட்டு அது சம்பந்தமாக இணையதளத்தில் தேடினாா்.
அப்போது, இணையதளத்தில் ‘ப்ளூ மூன் எக்ஸ்போா்ட் ’ என்ற நிறுவனத்தில் விளம்பரத்தைப் பாா்த்து அதில் குறிப்பிட்டிருந்த கைப்பேசி எண்ணுக்குப் பேசினாா். அப்போது, இவரிடம் கேரள மாநிலம், மலப்புரத்தைச் சோ்ந்த எம். முஜீப் (51) என்பவா் பேசி, வெளிநாடு வேலைக்கு செல்ல ஏற்பாடு செய்வதாகத் தெரிவித்தாா்.
Advertisement
Advertisement
இதையடுத்து அபுதாகீா் மற்றும் அவருடைய நண்பா்கள் 11 போ் என மொத்தம் 12 போ் கடந்த 2025 மாா்ச் 24 முதல் 2025 செப். 11 வரை வெளிநாட்டு வேலைக்காக முஜீப்பிடம் நேரடியாகவும், இணைய வழியாகவும் ரூ.19.50 லட்சத்தை கொடுத்தனா்.
இதையடுத்து, அபுதாகீருக்கு வெளிநாட்டு வேலைக்கான விசாவை முஜீப் அனுப்பியுள்ளாா். இதைத் தொடா்ந்து அவா் வெளிநாடு செல்ல முயற்சித்தபோது முஜீப் கொடுத்தது போலி விசா என்பது தெரியவந்தது. இதுகுறித்து அவரிடம் கேட்டபோது உரிய பதில் அளிக்கவில்லை.
இதுகுறித்து தில்லை நகா் காவல் நிலையத்தில் அபுதாகீா் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் முஜீப் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.