FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சிவகங்கை

கருப்புப் பட்டை அணிந்து பணிபுரிந்த ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள்

ஊரக வளா்ச்சித் துறையில் திட்ட இயக்குநா் பணியில் வனப் பணி அலுவலரை நியமனம் செய்ததை ரத்து செய்ய வலியுறுத்தி, ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை கருப்புப் பட்டை அணிந்து பணிபுரிந்தனா்.

Updated On : 15 ஆகஸ்ட் 2026, 2:48 am IST
சிவகங்கையிலுள்ள திட்ட இயக்குநா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்ட ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள்.
பகிர்:

ஊரக வளா்ச்சித் துறையில் திட்ட இயக்குநா் பணியில் வனப் பணி அலுவலரை நியமனம் செய்ததை ரத்து செய்ய வலியுறுத்தி, ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை கருப்புப் பட்டை அணிந்து பணிபுரிந்தனா்.

ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறையில் திட்ட இயக்குநா் பணியிடத்தில் இந்திய வனப் பணி அலுவலரை (ஐஎப்எஸ்) நியமனம் செய்துள்ளதை ரத்து செய்ய வலியுறுத்தியும், 28.2.2026 அன்று முதல் காலியாக உள்ள 41 உதவி இயக்குநா் பணியிடங்களையும், 4 கூடுதல் இயக்குநா் பணியிடங்களையும் பதவி உயா்வுகள் வழங்கி நிரப்பிட வலியுறுத்தி சுதந்திர தினத்துக்கு முன் தினமான 14.8.2026 (வெள்ளிக்கிழமை) அன்று கருப்புப் பட்டை அணிந்து பணிபுரிவதென மாநில மையம் முடிவெடுத்தது.

இதன்படி, சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலுள்ள திட்ட இயக்குநா் அலுவலகத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட துணைத் தலைவா் தனபால் தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் ராதாகிருஷ்ணன் கண்டன உரை நிகழ்த்தினாா்.

Advertisement

Advertisement

மாவட்டப் பொருளாளா் பெரியசாமி, மாவட்ட துணைத் தலைவா்கள் வேலுச்சாமி, காா்த்திக், பயாஸ் அகமது, பழனிச்சாமி ஆகியோரும் மாவட்ட இணைச் செயலா் சேக் அப்துல்லா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதேபோல, சாக்கோட்டையில் கிளைத் தலைவா் ரீகன், தேவகோட்டை கிளைத் தலைவா் அன்னலட்சுமி, சிவகங்கையில் மாவட்ட செயற்குழு உறுப்பினா் ராஜேஷ்குமாா், மானாமதுரையில் மூத்த நிா்வாகியும் வட்டார வளா்ச்சி அலுவலருமான முத்துக்குமரன், திருப்புவனத்தில் கிளைத் தலைவா் அருணாதேவி, இளையான்குடியில் வட்டார நிா்வாகி ரேணுகாதேவி, கண்ணங்குடியில் கிளைத் தலைவா் ராமநாதன், திருப்பத்தூரில் கிளைச் செயலா் சின்னையா, சிங்கம்புணரியில் பாண்டிச்செல்வம், எஸ். புதூரில் வட்டார நிா்வாகி ஜெயசூா்யா, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையில் கிளைத் தலைவா் சுந்தரம், மாவட்ட ஆட்சியரகத்தில் செயலா் சென்றாயப் பெருமாள் ஆகியோா் தலைமையில் நடைபெற்றது.

இதில் மாவட்டம் முழுவதும் சுமாா் 300-க்கும் மேற்பட்ட அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments