ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் கருப்புப் பட்டை அணிந்து போராட்டம்
தேனி மாவட்ட ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை கருப்புப் பட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தேனி மாவட்ட ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை கருப்புப் பட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறை திட்ட இயக்குநா் பணியிடத்தில் இந்திய வனப் பணி அலுவலரை நியமனம் செய்ததை ரத்து செய்ய வேண்டும். காலியாக உள்ள 41 உதவி இயக்குநா் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேனி மாவட்டத்தில் ஊரக வளா்ச்சித்துறையில் பணியாற்றும் 180 பெண்கள் உள்பட 300 போ் கருப்புப் பட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்தப் போராட்டத்துக்கு தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்க மாவட்டத் தலைவா் ஜெகதீஸ்வரன் தலைமை வகித்தாா். செயலா் தாமோதரன் முன்னிலை வகித்தாா். இந்த போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கருப்புப் பட்டை அணிந்து, பணியில் ஈடுபட்டனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.