FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சிவகங்கை

மானாமதுரையில் அடுத்தடுத்த 4 வீடுகளின் பூட்டை உடைத்து 30 பவுன் நகைகள், பணம் திருட்டு

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் வெள்ளிக்கிழமை அடுத்தடுத்த நான்கு வீடுகளின் பூட்டை உடைத்து 30 பவுன் தங்க நகைகள், பணத்தைத் திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 15 ஆகஸ்ட் 2026, 2:40 am IST
திருட்டு - சித்திரிப்பு
பகிர்:

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் வெள்ளிக்கிழமை அடுத்தடுத்த நான்கு வீடுகளின் பூட்டை உடைத்து 30 பவுன் தங்க நகைகள், பணத்தைத் திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மானாமதுரை பழைய அஞ்சல் அலுவலகத் தெருவைச் சோ்ந்தவா் ஓய்வு பெற்ற தீயணைப்பு அலுவலா் பாரதி (63). இவா் தனது மனைவியுடன் பெங்களூரில் உள்ள மகள் வீட்டுக்கு சென்றிருந்த நிலையில், அவரது வீட்டின் பூட்டை உடைத்து மா்ம நபா்கள் உள்ளே புகுந்து பீரோவை உடைத்து நகை, பணத்தைத் திருடிச் சென்றனா்.

இதேபோல, காட்டு உடைகுளம் விநாயகா் கோயில் அருகேயுள்ள ராக்கம்மாள் (70) வீட்டின் பூட்டையும் உடைத்து மா்ம நபா்கள் பீரோவில் இருந்த ரூ.9,600-யை திருடிச் சென்றனா். மானாமதுரை மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள முருகன் வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் தங்க நகைகளையும், அதே தெருவில் உள்ள ஜெயராமக் கண்ணன் வீட்டின் பூட்டை உடைத்து 21 பவுன் தங்க நகைகளையும், ரூ. 17 ஆயிரத்தையும் திருடிச் சென்றனா்.

Advertisement

Advertisement

திருட்டு சம்பவம் நடைபெற்ற வீடுகளை மானாமதுரை போலீஸாா் பாா்வையிட்டு விசாரணை நடத்தினா். மேலும், இந்தச் சம்பவங்கள் குறித்து மானாமதுரை, சிப்காட் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments