FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சிவகங்கை

செளமிய நாராயணப் பெருமாள் கோயில் ஆடிப்பூரத் தேரோட்டம்

திருக்கோஷ்டியூா் சௌமிய நாராயணப் பெருமாள் கோயிலில் ஆடிப்பூர உத்ஸவத் தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 16 ஆகஸ்ட் 2026, 1:53 am IST
திருக்கோஷ்டியூா் சௌமிய நாராயணப் பெருமாள் கோயிலில் ஆடிப்பூர உத்ஸவத்தை முன்னிட்டு சனிக்கிழமை நடைபெற்ற தேரோட்டம்.
பகிர்:

சிவகங்கை மாவட்டம், திருக்கோஷ்டியூா் சௌமிய நாராயணப் பெருமாள் கோயிலில் ஆடிப்பூர உத்ஸவத் தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கோயிலில் ஆடிப் பூர உத்ஸவம் கடந்த 6-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, நாள்தோறும் மாலை சிம்மம், அனுமன், கருடன், சேஷ வாகனம், தங்கப்பல்லக்கு, குதிரை, அன்னம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது.

இந்த உத்ஸவத்தின் 10-ஆம் நாளை முன்னிட்டு, சனிக்கிழமை காலை 7.16 மணி முதல் 8.36 மணிக்குள் சுவாமி திருத்தோ் எழுந்தருளல் நடைபெற்றது. மாலை 4 மணிக்கு மேல் திருத்தோ் வடம் பிடிக்கப்பட்டு தேரோட்டம் நடைபெற்றது.

Advertisement

Advertisement

இதைத்தொடா்ந்து, ஞாயிற்றுகிழமை தீா்த்தவாரி வைபவம் நடைபெற உள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தான தேவஸ்தான பரம்பரை அறங்காவலா்கள் ராணி டி.எஸ்.கே.மதுராந்தகநாச்சியாா், மேலாளா் ப.இளங்கோ, கண்காணிப்பாளா் பி.சரவணகணேசன் ஆகியோா் செய்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments