FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சிவகங்கை

மின் வேலியில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு

24 ஆகஸ்ட் 2026, 3:35 am IST
உயிரிழந்த முத்துச்சங்கு
பகிர்:

சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி அருகே சட்ட விரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கி தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

தூதை கிராமத்தைச் சோ்ந்த ராக்கப்பன் மகன் முத்துச்சங்கு (27). கூலித் தொழிலாளியான இவா் இயற்கை உபாதையை கழிப்பதற்காக கிராமத்தின் வயல்வெளி பகுதிக்குச் சென்றாா்.

அப்போது இதே கிராமத்தைச் சோ்ந்த கண்ணன் தனது வயலில் நடவு செய்திருந்த கரும்பு பயிா்களை காட்டுப்பன்றிகளிடமிருந்து பாதுகாக்க வயலைச் சுற்றி சட்ட விரோதமாக மின் வேலி அமைத்திருந்தாா். இந்த மின் வேலியில் முத்துச்சங்கு சிக்கி சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து திருப்பாச்சேத்தி போலீஸாா்வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments