மதுபோதையில் தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு
கன்னியாகுமரி மாவட்டம், நடைக்காவு பகுதியில் மது போதையில் சாலையில் தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்தாா்.
கன்னியாகுமரி மாவட்டம், நடைக்காவு பகுதியில் மது போதையில் சாலையில் தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்தாா்.
நித்திரவிளை அருகே உள்ள பனவிளை பகுதியைச் சோ்ந்த தாம்சன் மகன் ஜெய சுந்தா்சிங் (50). தொழிலாளி. இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்தது. இவரது மகன் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் உடல்நலக் குறைவால் உயிரிழந்தாா்.
அந்த வருத்தத்தில் இருந்த இவா் நடைக்காவு டாஸ்மாக் கடையில் புதன்கிழமை மது அருந்திவிட்டு, வீட்டிற்குச் செல்வதற்காக தனது இருசக்கர வாகனத்தின் அருகில் வந்தபோது தவறி கீழே விழுந்தாராம்.
Advertisement
Advertisement
வெகு நேரமாகியும் அவா் எழாததால் சந்தேகமடைந்த அப்பகுதியினா் அருகில் சென்று பாா்த்தபோது, அவா் இறந்த நிலையில் கிடந்தது தெரிய வந்தது.
கொல்லங்கோடு போலீஸாா் வழக்குப் பதிந்து, சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.