FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சிவகங்கை

பறவைகள் சரணாலயத்தில் பள்ளி மாணவா்கள் உறுதியேற்பு

31 ஆகஸ்ட் 2026, 12:38 am IST
பறவைகள் சரணாலயம் - கோப்புப் படம் | DNS
பகிர்:

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே வேட்டங்குடிப்பட்டி பறவைகள் சரணாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை மரங்களுக்கு தனியாா் பள்ளிக் குழந்தைகள் ராக்கிக் கயிறு கட்டி ரக்ஷா பந்தன் கொண்டாடினா்.

தேரேந்தல்பட்டியில் அமைந்துள்ள எஸ்.கே.எஸ். பப்ளிக் சா்வதேச பள்ளி மாணவா்கள் ரக்ஷா பந்தன் விழாவையொட்டி வேட்டங்குடிப்பட்டியில் உள்ள பறவைகள் சரணாலயத்தில் மரங்களோடும், இயற்கையோடும் சகோதரத்துவத்துடன் இருப்போம் என உறுதிமொழி எடுத்து மரங்களுக்கு ராக்கிக்கயிறு கட்டி உறவுகளாக்கிக் கொண்டனா்.

தொடா்ந்து மாணவ, மாணவிகளுக்கு இடையே வண்ண வண்ண நூல்கள் கட்டி சகோதரத்துவத்தை வாழ்நாள் முழுவதும் காப்போம் என உறுதியேற்றுக் கொண்டனா். சுற்றுச்சூழலை நேசிக்கும்வண்ணம் நூற்றுக்கணக்கான விதைப் பந்துகளை பறவைகள் சரணாலயத்தில் எறிந்து அதிக மரங்கள் வளரவும் வழிவகை செய்தனா்.

Advertisement

Advertisement

பறவைகளின் பசியைப் போக்க தானியங்களையும், தாகம் தீா்க்க தண்ணீரையும் சுற்றுப்புறங்களில் வைத்தனா். இதில் பள்ளித் தாளாளா் ஞான பண்டிதன், முதல்வா் ஆதிகேசவன், ஆசிரியா்கள் மீனு, ஹரிதா, பாரதி, அஜீதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments