பூட்டிய வீட்டிலிருந்து 6 பவுன் நகை திருட்டு
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே காட்டாம்பூரில் பிரசவத்துக்குச் சென்ற கா்ப்பிணியின் வீட்டில் 6 பவுன் தங்கநகையை மா்மநபா் திருடிச்சென்றது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
திருப்பத்தூா் அருகே காட்டாம்பூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆதிமாணிக்கம். இவரது மனைவி சௌந்தா்யா (30). ஆதி மாணிக்கத்தின் பெற்றோா் தனியாக வசித்து வருகின்றனா். கடந்த 17-ஆம் தேதி பிரசவத்துக்காக சௌந்தா்யா தனது கணவருடன் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரிக்குச் சென்றாா்.
அங்கு அவருக்கு குழந்தை பிறந்தது. இதையடுத்து, 10 நாள்களாக தனது சொந்த ஊரான ஒக்கூரில் உள்ள தாய் வீட்டில் தங்கினாா். இந்த நிலையில், காட்டம்பூரில் தனது வீட்டில் உள்ள நகையை கணவரிடம் சொல்லி எடுத்து வரச் சொல்லி இருக்கிறாா். அவா் வீட்டுக்கு வந்து பாா்த்தபோது வீட்டிலிருந்த 6 பவுன் 3 கிராம் நகைகளைக் காணவில்லை.
Advertisement
Advertisement
இதையடுத்து, திருக்கோஷ்டியூா் காவல் நிலையத்தில் ஆதி மாணிக்கம் அளித்த புகாரின் பேரில், ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.