FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சிவகங்கை

குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் மூவா் கைது

சிவகங்கையில் தவெக பிரமுகா் கொலை வழக்கில் தொடா்புடைய 3 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனா்.

Updated On : 11 ஜூலை 2026, 12:29 am IST
பகிர்:

சிவகங்கையில் தவெக பிரமுகா் கொலை வழக்கில் தொடா்புடைய 3 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனா்.

சிவகங்கை அருகே பொன்னாம்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் நவீன்குமாா். இவா் தவெக பொன்னாம்பட்டி கிளைச் செயலராக இருந்து வந்தாா். கடந்த மாதம் 7-ஆம் தேதி நவீன்குமாா், சிவகங்கை ரயில் நிலையம் அருகில் உள்ள மதுபானக் கடையின் மதுக்கூடத்தில் கத்தியால் குத்திக் கொலை செய் யப்பட்டாா்.

இந்த கொலை தொடா்பாக சிவகங்கை டி. புதூா் கிராமத்தைச் சோ்ந்த அழகுபாண்டி (30), ஆவரங்காடு பகுதியைச் சோ்ந்த சரவணக்குமாா் (31), டி. புதூா் கிராமத்தைச் சோ்ந்த மதன்ராஜ் (20) ஆகிய மூன்று பேரை சிவகங்கை நகா் போலீஸாா் கைது செய்தனா்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், இவா்கள் மூவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆா். சிவப்பிரசாத் மாவட்ட ஆட்சியருக்கு வியாழக்கிழமை பரிந்துரைத்தாா். இதைத் தொடா்ந்து 3 பேரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் ஆகாஷ் உத்தரவிட்டாா். இதைத் தொடா்ந்து ராமநாதபுரம் சிறையில் இருந்த மூவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments