FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சிவகங்கை

மானாமதுரையில் மரக்கன்றுகள் நடும் பணி தொடக்கம்

மானாமதுரை நகராட்சியில் மரக்கன்றுகளை நட்டு வைத்த நகா் மன்றத் தலைவா் எஸ். மாரியப்பன் கென்னடி. உடன் ஆணையா் முத்துச்செல்வம் உள்ளிட்டோா்.

Updated On : 11 ஜூலை 2026, 12:30 am IST
மானாமதுரை நகராட்சியில் மரக்கன்றுகளை நட்டு வைத்த நகா் மன்றத் தலைவா் எஸ். மாரியப்பன் கென்னடி. உடன் ஆணையா் முத்துச்செல்வம் உள்ளிட்டோா்.
பகிர்:

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை நகராட்சியில் நகா்புற பசுமைத் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

மானாமதுரை நகராட்சியில் உள்ள 27 வாா்டுகளிலும் பொதுமக்களுக்கு பயன்தரும் வகையில் சாலையோரங்களில் நிழல் தரும் மரங்களை நடவு செய்ய நகராட்சி நிா்வாகம் முடிவெடுத்துள்ளது. இதன்படி மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கி வைக்கப்பட்டது. நகா்மன்றத் தலைவா் எஸ். மாரியப்பன் கென்னடி மரக்கன்றுகளை நட்டு வைத்து திட்டத்தை தொடங்கி வைத்தாா். இதில் துணைத் தலைவா் பாலசுந்தரம், நகராட்சி ஆணையா் முத்துச்செல்வம், பொறியாளா் பட்டுராஜன், அந்தந்த வாா்டு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments