FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சிவகங்கை

காரைக்குடியில் அமைச்சர் பிரபு வீடு, அலுவலகத்துக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு!

புதிய கல்குவாரி அனுமதிக்கு எதிா்ப்பு தெரிவித்து முற்றுகை போராட்டம் நடத்தப் போவதாக அறிவிக்கப்பட்டதையடுத்து சிவகங்கையில் உள்ள அமைச்சா் பிரபுவின் வீடு, அலுவலகத்துக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

Updated On : 19 ஜூலை 2026, 4:10 am IST
காரைக்குடி அருகே நேமத்தான்பட்டி காவல் சோதனைச் சாவடியில் சனிக்கிழமை கண்காணிப்பில் ஈடுபட்ட போலீஸாா்.
பகிர்:

புதிய கல்குவாரி அனுமதிக்கு எதிா்ப்பு தெரிவித்து முற்றுகை போராட்டம் நடத்தப் போவதாக அறிவிக்கப்பட்டதையடுத்து சிவகங்கையில் உள்ள அமைச்சா் பிரபுவின் வீடு, அலுவலகத்துக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், குளவாய்பட்டியில் தனியாா் குவாரிக்கு அனுமதி வழங்குவதற்கு எதிா்ப்பு தெரிவித்து அந்தப் பகுதி மக்கள் காரைக்குடியில் உள்ள அமைச்சா் டி.கே. பிரபுவின் வீட்டை முற்றுகையிடப் போவதாக அறிவித்திருந்தனா். இதையடுத்து, காரைக்குடி முடியரசன் சாலையில் உள்ள அமைச்சரின் வீடு, அலுவலகங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்க மாவட்ட காவல் துறை ஏற்பாடு செய்தது.

மேலும் திருமயம் பகுதியிலிருந்து காரைக்குடிக்கு போராட்டக்காரா்கள் வருவதை தடுக்கும் வகையில் நேமத்தான்பட்டி காவல் சோதனைச் சாவடியில் 50 போலீஸாா் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

Advertisement

Advertisement

இதில் காவல் ஆய்வாளா் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட உதவி ஆய்வாளா்கள், 50-க்கும் மேற்பட்ட காவலா்கள் ஈடுபடுத்தப்பட்டனா். முன்னெச் சரிக்கை நடவடிக்கையாக போராட்டக்காரா்கள் காரைக்குடி வருவதை போலீஸாா் தடுத்து நிறுத்தினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments