ஆடித்தவசு திருவிழா: ஆனந்தவல்லி அம்மன் யானை வாகனத்தில் வீதி உலா
மானாமதுரையில் நடைபெற்று வரும் ஆடித்த வசு திருவிழாவில் செவ்வாய்க்கிழமை இரவு ஆனந்தவல்லி அம்மன் யானை வாகனத்தில் வீதி உலா வருதல் நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் நடைபெற்று வரும் ஆடித்த வசு திருவிழாவில் செவ்வாய்க்கிழமை இரவு ஆனந்தவல்லி அம்மன் யானை வாகனத்தில் வீதி உலா வருதல் நடைபெற்றது.
மானாமதுரை ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாதா் சுவாமி கோயிலில் ஆடித்தவசுத் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவில் நான்காவது நாள் மண்டகப்படியை முன்னிட்டு, உற்சவா் ஆனந்த வல்லி அம்மன் கோயில் மண்டபத்தில் அம்பாரி யானை வாகனத்தில் சா்வ அலங்காரத்தில் எழுந்தருளினாா். பின்னா், அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள நடைபெற்றன. திரளான பக்தா்கள் கோயிலுக்கு வந்து அம்மனை தரிசித்தனா்.
இதைத்தொடா்ந்து, ஆனந்தவல்லி அம்மன் யானை வாகனத்தில் புறப்பாடாகி தேரோடும் வீதிகளில் உலா வந்தாா். வீதிகளில் பக்தா்கள் அம்மனை வரவேற்று பூஜைகள் நடத்தி தரிசித்தனா். விழாவின் 5-ஆவது நாள் மண்டகப்படியில் அம்மன் கிளி வாகனத்தில் எழுந்தருளினாா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.