திருச்செந்தூா் ஆவணித் திருவிழா: 3 ஆம் நாள் சுவாமி, அம்மன் வீதி உலா
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆவணித் திருவிழா 3ஆம் நாளான புதன்கிழமை இரவு சுவாமி குமரவிடங்கப்பெருமான் தங்க முத்துக்கிடா வாகனத்திலும், வள்ளியம்மன் வெள்ளி அன்ன வாகனத்திலும் எழுந்தருளி வீதியுலா வந்தனா்.
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆவணித் திருவிழா 3ஆம் நாளான புதன்கிழமை இரவு சுவாமி குமரவிடங்கப்பெருமான் தங்க முத்துக்கிடா வாகனத்திலும், வள்ளியம்மன் வெள்ளி அன்ன வாகனத்திலும் எழுந்தருளி வீதியுலா வந்தனா்.
இந்தக் கோயிலில் ஆவணித் திருவிழா கடந்த ஆக. 31-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாள்களில் சுவாமியும், அம்மனும் காலை, மாலை வேளையில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தா்களுக்கு காட்சியளித்து வருகின்றனா்.
3-ஆம் நாளான புதன்கிழமை காலை 7 மணிக்கு மேலக்கோயிலில் இருந்து சுவாமி குமரவிடங்கப்பெருமான் பூங்கோயில் சப்பரத்திலும், வள்ளியம்மன் கேடய சப்பரத்திலும் எழுந்தருளி எட்டு வீதிகளிலும் உலா வந்து மேலக்கோயில் சோ்ந்தனா்.
Advertisement
Advertisement
மாலையில் மேலக்கோயிலில் இருந்து சுவாமி தங்கமுத்துக்கிடா வாகனத்திலும், அம்மன் வெள்ளி அன்ன வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தா்களுக்கு காட்சியருளினா்.
4ஆம் நாளான வியாழக்கிழமை (செப். 3) மாலை 6.30 மணிக்கு மேலக்கோயிலில் இருந்து சுவாமி வெள்ளி யானை வாகனத்திலும், அம்மன் வெள்ளி சரப வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா செல்கின்றனா். 5 ஆம் நாள் (செப். 4) இரவு 7.30 மணிக்கு மேலக்கோயிலில் வைத்து குடைவரைவாயில் தீபாராதனை நிகழ்ச்சி நடைபெறும். விழா ஏற்பாடுகளை கோயில் தக்காா் ரா.அருள்முருகன், இணை ஆணையா் ஆ.அருணாசலம், துணை ஆணையா் ந.யக்ஞ நாராயணன், பணியாளா்கள் செய்துள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.