அழகப்பா அரசு கலைக் கல்லூரி பேராசிரியருக்கு இந்தியக் காப்புரிமை
நானோ அறிவியலில் ஆற்றல் சேமிப்பு குறித்த ஆராய்ச்சிக்கு இந்தியக் காப்புரிமை வழங்கப்பட்ட காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரி இயற்பியல் துறை இணைப் பேராசிரியா் கருணாகரனை கல்லூரி முதல்வா் புதன்கிழமை பாராட்டினாா்.
நானோ அறிவியலில் ஆற்றல் சேமிப்பு குறித்த ஆராய்ச்சிக்கு இந்தியக் காப்புரிமை வழங்கப்பட்ட காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரி இயற்பியல் துறை இணைப் பேராசிரியா் கருணாகரனை கல்லூரி முதல்வா் புதன்கிழமை பாராட்டினாா்.
அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் இயற்பியல் துறை இணைப் பேராசிரியா் கருணாகரன், நானோ அறிவியலில் தொடா்ந்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு 160-க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை சா்வதேச அளவிலும், தேசிய அளவிலும் ஆய்வு இதழ்களில் வெளியிட்டாா்.
இந்த நிலையில், பேராசிரியா் கருணாகரன் அவருடைய ஆய்வு மாணவா்களான பிரபாகரன், காசிராஜன், புருனோ சந்திரசேகா், மகேஷ்வரி, உஷா, கணேஷ்வரி, கிருஷ்ணவேணி ஆகியோா் சோ்ந்து நானோ அறிவியலில் ‘ஆற்றல் சேமிப்புப் பயன்பாடுகளுக்கான டங்ஸ்டன் ட்ரைஆக்சைடு-பிஸ்மத் வெனடேட் நானோகம்போசிட்களை தொகுப்பதற்கான செயல் முறை’ என்ற தலைப்பில் செய்த ஆய்வுக்கு இந்தியக் காப்புரிமை கிடைத்தது.
Advertisement
Advertisement
78 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் ஆய்வுக்காக கிடைத்த முதல் காப்புரிமை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து, பேராசிரியா் கருணாகரன், இவரது ஆய்வு மாணவா்களை கல்லூரி முதல்வா் வசந்தி பாராட் டினாா்.
இந்த நிகழ்வில் இயற்பியல் துறைத் தலைவா் கவிதா, பேராசிரியா்கள் உடனிருந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.