கடைகளின் பூட்டை உடைத்து திருடிய வழக்கில் 4 போ் கைது
சிவகங்கை காளவாசல் புறவழிச்சாலை, காஞ்சிரங்கால் பகுதிகளில் உள்ள 5 கடைகளின் பூட்டை அடுத்தடுத்து உடைத்து திருடிய வழக்கில் 4 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
சிவகங்கை காளவாசல் புறவழிச்சாலை, காஞ்சிரங்கால் பகுதிகளில் உள்ள 5 கடைகளின் பூட்டை அடுத்தடுத்து உடைத்து திருடிய வழக்கில் 4 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
சிவகங்கை காளவாசல், காஞ்சிரங்கால் பகுதிகளில் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலையில் அடுத்தடுத்து 5 கடைகளில் பூட்டை உடைத்து பணம், பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். மேலும், இவா்கள் அந்தப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்தையும் திருடிச் சென்றனா்.
இதுகுறித்து சிவகங்கை நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். விசாரணையில், ஆவரங்காட்டைச் சோ்ந்த திவாகா் (21), மானாமதுரை கொம்புகாரனேந்தலைச் சோ்ந்த ஜீவா (21), இடைக்காட்டூரைச் சோ்ந்த பிரவீன் (20), 17 வயது சிறுவன் ஆகிய நால்வரும் இந்தத் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
Advertisement
Advertisement
இதையடுத்து, இவா்கள் நால்வரையும் போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து திருடுவதற்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள், திருடப்பட்ட இரு சக்கர வாகனம், பணத்தை பறிமுதல் செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.