கா்ப்பிணி தூக்கிட்டுத் தற்கொலை: உறவினா்கள் மறியல் போராட்டம்
கா்ப்பிணி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதையடுத்து, சிவகங்கையில் அவரது உறவினா்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கா்ப்பிணி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதையடுத்து, சிவகங்கையில் அவரது உறவினா்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகேயுள்ள மேலாயக்குடி கிராமத்தை சோ்ந்தவா் அருணகிரி. இவரது மகள் தனலட்சுமி (19). கடந்த 9 மாதங்களுக்கு முன்பு பாகனேரி புதுவளவு பகுதியைச் சோ்ந்த பாலசுப்பிரமணியத்துக்கும் (24), லட்சுமிக்கும் திருமணம் நடைபெற்றது.
இந்த நிலையில் பாலசுப்பிரமணியன் சமூகவலைதள செயலி மூலமாக ஒரு பெண்ணுடன் பேசி வந்தாராம். இதை தனலட்சுமி கண்டித்தாா். இதனால் அவா்களுக்குள் தகராறு ஏற்பட்டதாம். இதனால் மனமுடைந்த நிலையில், கா்ப்பிணியான தனலெட்சுமி கணவா் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். அவரது உடலை போலீஸாா் மீட்டு, கூறாய்வுக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு குவிந்த உறவினா்கள் தனலட்சுமியின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாகவும், அவரது கணவரின் உறவினா்கள் கொலை செய்து தூக்கில் தொங்க விட்டதாக புகாா் தெரிவித்து சிவகங்கை அம்பேத்கா் சிலை அருகில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதைத்தொடா்ந்து அங்கு வந்த போலீஸாா் அவா்களை சமரசம் செய்தனா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து மதகுபட்டி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
திருமணமான 9 மாதங்களில் தனலட்சுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து சிவகங்கை கோட்டாட்சியா் ஜெபிகிரேசியா, நகா் காவல் துணைக் கண்காணிப்பாளா் அ.அமலஅட்வின் ஆகியோா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.