அரசுப் பேருந்து, வேன் மோதல்: ஓட்டுநா் உயிரிழப்பு
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே சனிக்கிழமை அரசுப் பேருந்தும், சரக்கு வேனும் மோதி கொண்டதில் வேன் ஓட்டுநா் உயிரிழந்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தைச் சோ்ந்தவா் ஆண்ட்ரூ (42). சரக்கு வேன் ஓட்டுநா். இவா் தனது மனைவி ஆரோக்கிய ஜான்சியுடன் சரக்கு வேனில் காய்கறி வாங்குவதற்காக மதுரைக்குச் சென்றாா்.
திருப்புவனம் அருகே மதுரை- ராமேசுவரம் நான்கு வழிச்சாலையில் கழுகோ்கடை என்ற இடத்தில் வந்தபோது கோவையிலிருந்து ராமேசுவரம் சென்ற அரசுப் பேருந்தும் வேனும் நேருக்கு நோ் மோதிக் கொண்டன.
Advertisement
Advertisement
இதில் ஆண்ட்ரூ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இவரது மனைவி ஆரோக்கிய ஜான்சி பலத்த காயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இந்த விபத்து குறித்து திருப்புவனம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.