சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் அவதார விழா
மானாமதுரை ஒன்றியம், கட்டிக்குளத்தில் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் 169-ஆவது அவதார விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம், கட்டிக்குளத்தில் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் 169-ஆவது அவதார விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கட்டிக்குளம் கருப்பனேந்தல் மடத்தின் தவச்சாலையில் நடைபெற்ற இந்த விழாவையொட்டி, மாயாண்டி சுவாமிகள் சந்நிதி முன் குலால சிவாசாரியா்கள் யாக வேள்வி நடத்தினா். பூா்ணாஹுதி முடிந்து கலச நீரால் மூலவா் மாயாண்டி சுவாமிகளுக்கும், உற்சவருக்கும் அபிஷேகங்கள், சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன.
இதில் திரளானோா் பங்கேற்று, மாயாண்டி சுவாமிகளை தரிசித்தனா். பிற்பகலில் மடத்தில் நடைபெற்ற அன்னதானத்தில் ஏராமானோா் பங்கேற்றனா். இரவில் உற்சவா் மாயாண்டி சுவாமிகள் பூப்பல்லக்கில் வீதி உலா வந்தாா். இதற்கான ஏற்பாடுகளை கட்டிக்குளம் கிராம மக்கள் செய்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.