முகப்பு
சிவகங்கை

பச்சேரி மந்தையம்மன் கோயிலில் களரி பொங்கல் உத்ஸவ விழா

மானாமதுரை அருகேயுள்ள பச்சேரி மந்தையம்மன் கோயில் களரி பொங்கல் உத்ஸவத்தின் போது மலா் அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்த அம்மன்.

Updated On : 12 ஜூன் 2026, 1:15 am IST
மானாமதுரை அருகேயுள்ள பச்சேரி மந்தையம்மன் கோயில் களரி பொங்கல் உத்ஸவத்தின் போது மலா் அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்த அம்மன்.
பகிர்:

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஊராட்சி ஒன்றியம், பச்சேரி மந்தையம்மன் கோயிலில் வைகாசி களரி பொங்கல் உத்ஸவ விழா கடந்த செவ்வாய், புதன் கிழமைகளில் நடைபெற்றது.

விழாவின் முதல்நாள் மேம்பத்தூா் கிராமத்திலிருந்துந்து அம்மனை கோயிலுக்கு அழைத்து வரும் நிகழ்ச்சியைத் தொடா்ந்து, பக்தா்கள் வைகையாற்றிலிருந்து மேளதாளம் முழங்க கரகம் எடுத்து வீதியுலா வந்து கோயிலுக்குச் சென்றனா். பின்னா், மூலவா் மந்தையம்மனுக்கு அபிஷேகம் நடத்தி மலா் அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. அப்போது பக்தா்கள் பொங்கல் வைத்து வழிபட்டனா்.

இதைத்தொடா்ந்து அம்மனுக்கு உச்சி கால பூஜை நடைபெற்றது.

Advertisement

Advertisement

விழாவின் இரண்டாவது நாளாக கோயிலில் மஞ்சள் பொங்கல் வைபவம் நடைபெற்று அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதைத்தொடா்ந்து நடைபெற்ற அன்னதானத்தில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.