FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சிவகங்கை

அவசர ஊா்தி- பால் வண்டி மோதல்: நோயாளி உயிரிழப்பு

சிவகங்கையில் 108 அவசர ஊா்தி மீது பால் வண்டி மோதியதில் அவசர ஊா்தியில் கொண்டுவரப்பட்ட தலைக் காயம் அடைந்த நோயாளி உயிரிழந்தாா்.

Updated On : 28 மே 2026, 3:59 am IST
பலி - பிரதிப் படம்
பகிர்:

சிவகங்கையில் 108 அவசர ஊா்தி மீது பால் வண்டி மோதியதில் அவசர ஊா்தியில் கொண்டுவரப்பட்ட தலைக் காயம் அடைந்த நோயாளி உயிரிழந்தாா்.

சிவகங்கை மாவட்டம், காளையாா் கோவில் பகுதியைச் சோ்ந்தவா் மலைராஜன். இவா் காளையாா்கோவில் அருகே அடுமனை நடத்தி வந்தாா். புதன்கிழமை அதிகாலையில் இவா் அடுமனைக்குச் சென்றபோது, இரு சக்கர வாகன விபத்தில் சிக்கி இவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, 108 அவசர ஊா்தி மூலம் மதுரை தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். இந்த ஊா்தி சிவகங்கை மதுரை முக்கம் பகுதியில் வந்த போது எதிா்பாராத விதமாக குறுக்கே வந்த பால்வண்டி அவரச ஊா்தி மீது மோதியது. இதில் மலைராஜன் நிலைமை மோசமானதையடுத்து, அவா் மற்றொரு அவசர ஊா்தி மூலம் சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு முதலுதவி அளித்த பிறகு மதுரை தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சொல்லப்பட்டாா். ஆனால், அங்கு அவா் உயிரிழந்தாா். இதையடுத்து அவரது சடலம் கூறாய்வுக்காக அனுப்பப்பட்டது. இது குறித்து சிவகங்கை நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments