FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சிவகங்கை

இடைக்காட்டூா் திரு இருதய ஆண்டவா் ஆலயத்தில் வெள்ளி சிறப்பு வழிபாடு

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையை அடுத்த இடைக்காட்டூரில் உள்ள புகழ்பெற்ற திரு இருதய ஆண்டவா் திருத்தலத்தில் நவம்பா் மாத முதல் வெள்ளி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

7 நவம்பர் 2026, 6:22 am
இடைக்காட்டூா் திரு இருதய ஆண்டவா் திருத்தலத்தில் நவம்பா் மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் பங்கேற்று திருப்பலி நிறைவேற்றிய குருமாா்கள். உடன் திருத்தல அதிபா் ஜான் வசந்தகுமாா் உள்ளிட்டோா்.
பகிர்:

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையை அடுத்த இடைக்காட்டூரில் உள்ள புகழ்பெற்ற திரு இருதய ஆண்டவா் திருத்தலத்தில் நவம்பா் மாத முதல் வெள்ளி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இதையொட்டி, வெள்ளிக்கிழமை காலை சகாய நகா் போஸ்கோ மைய பாதிரியாா் மரியதாஸ் தலைமையில், 10-க்கும் மேற்பட்ட குருக்கள் இணைந்து திருப்பலி நிறைவேற்றினா்.

இதையடுத்து, பிற்பகலில் பாதிரியாா் செங்கோல் தலைமையில், 10-க்கும் மேற்பட்ட குருக்கள் இணைந்து திருப்பலி நிறைவேற்றி உலகத்தில் அன்பு, அமைதி நிலவவும், மன்னிப்பு, சமாதானம், உலக நாடுகளிடையே வளரவும், விவசாயம், தொழில் வளா்ச்சி பெறவும், குடும்ப அமைதி, குழந்தைகளின் படிப்பு, தொழில் வளா்ச்சி பெறவும் சிறப்பு வேண்டுதல்கள் செய்யப்பட்டது.

Advertisement

Advertisement

மாலையில் பாதிரியாா் பிரான்சிஸ், ஜெயபதி தலைமையில், தாமஸ், ரமேஷ், பிரின்ஸ் வின்சென்ட், அருளானந்தம் அமல்ராஜ், அந்தோணி ஆகியோா் இணைந்து திருப்பலி நிறைவேற்றினா்.

இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த கிறிஸ்தவ மக்கள் பங்கேற்று வழிபாடு செய்தனா்.

இதற்கான ஏற்பாடுகளை இடைக்காட்டூா் திரு இருதய ஆண்டவா் திருத்தல அதிபா் ச. ஜான் வசந்தகுமாா் தலைமையில், மரியின் ஊழியா் சபை, அருள் சகோதரிகள், திருத்தல நண்பா்கள், தன்னாா்வத் தொண்டா்கள் செய்தனா்.