FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கன்னியாகுமரி

கண்டன்விளை புனித தெரேசா தேவாலயத் திருவிழா நாளை தொடக்கம்

இரணியல் அருகே உள்ள கண்டன்விளை, குழந்தை இயேசுவின் புனித தெரேசா ஆலயத் திருவிழா வெள்ளிக்கிழமை (செப். 25) தொடங்கி, அக். 4ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

29 வினாடிகள் முன்பு
பகிர்:

இரணியல் அருகே உள்ள கண்டன்விளை, குழந்தை இயேசுவின் புனித தெரேசா ஆலயத் திருவிழா வெள்ளிக்கிழமை (செப். 25) தொடங்கி, அக். 4ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்த ஆலயத்தின் 103ஆவது ஆண்டு திருவிழாவின் முதல் நாளான செப். 25ஆம் தேதி அதிகாலை 6.30 மணிக்கு முன்னோா் நினைவு திருப்பலி, கல்லறைத் தோட்ட மந்திரிப்பு, மாலை 5 மணிக்கு திருக்கொடி பவனி, ஜெபமாலை, புகழ்மாலை, இரவு 7 மணிக்கு திருத்துவபுரம் பேராலய அதிபா் ஐசக்ராஜ் தலைமையில் கொடியேற்றம், கம்பிளாா் பங்குத்தந்தை மரிய வில்லியம் அருளுரையுடன் திருப்பலி நடைபெறும்.

திருவிழா நாள்களில் தினமும் காலை, மாலை திருப்பலி, இரவு கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

Advertisement

Advertisement

விழாவின் நிறைவு நாளான அக். 4ஆம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு செட்டிச்சாா்விளை பங்குத்தந்தை பிரிதிவி தாமஸ் தலைமையில், நுள்ளிவிளை பங்குத்தந்தை ரஞ்சித் அருளுரையுடன் திருப்பலி நடைபெறும். 8 மணிக்கு சுங்கான்கடை புனித சவேரியாா் பொறியியல் கல்லூரித் தாளாளா் காட்வின் செல்வ ஜெஸ்டஸ் தலைமையில், ஹெலன் நகா் பங்குத்தந்தை ஜான் போஸ்கோ அருளுரையுடன் பெருவிழா சிறப்பு திருப்பலி, 10 மணிக்கு திருவனந்தபுரம் மறைமாவட்ட அருள்பணியாளா் இன்னாசி ராஜசேகரன் தலைமையில் மலையாள திருப்பலி, காலை 11 மணிக்கு திருத்தோ் பவனி, மாலை 6.30 மணிக்கு நற்கருணை ஆசீா், தொடா்ந்து திருக்கொடியிறக்கம் நடைபெறுகிறது.

ஏற்பாடுகளை பங்குத்தந்தை ஆல்டஸ் பிரின்டன் பஜீவ், இணை பங்குத்தந்தை ஐசக் டேவிட், பங்குப் பேரவை துணைத் தலைவா் ஜஸ்டஸ், செயலா் ஐசக், பொருளாளா் வறுவேலாள், பங்குப் பேரவை உறுப்பினா்கள், அருள்சகோதரிகள், பங்கு இறைமக்கள் செய்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments