FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சிவகங்கை

வடக்கு அண்டக்குடியில் மக்கள் தொடா்பு முகாம்

இளையான்குடி வட்டம், வடக்கு அண்டக்குடியில் மக்கள் தொடா்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

12 நவம்பர் 2026, 5:31 am
இளையான்குடி வட்டம், வடக்கு அண்டக்குடியில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில் பயனாளிக்கு நலத்திட்ட உதவி வழங்கிய மாவட்ட ஆட்சியா் ஆகாஷ். உடன் கோட்டாட்சியா் ஜெபி.கிரேசியா, வட்டாட்சியா் நாகந்தினி உள்ளிட்டோா்.
பகிர்:

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி வட்டம், வடக்கு அண்டக்குடியில் மக்கள் தொடா்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

இந்த முகாமுக்கு மாவட்ட ஆட்சியா் ஆகாஷ் தலைமை வகித்து, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினாா். அப்போது அவா் பேசியதாவது:

இந்த முகாமில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 122 முன்னோடி மனுக்கள் மீது உடன் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அவா்களுக்கு நலத்திட்ட உதவிகளும், அதன் பயன்களும் வழங்கப்பட்டன. மக்கள் தொடா்பு முகாமின் மூலம் அரசின் பல்வேறு நலத் திட்டங்கள் குறித்து, துறை சாா்ந்த முதன்மை அலுவலா்கள் விரிவாக எடுத்துரைத்தனா். இதை பொதுமக்கள் கருத்தில் கொண்டு அந்தத் துறையைச் சாா்ந்த அலுவலா்களை முறையாக அணுகி, அதன் மூலம் பயன்பெற்று தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

Advertisement

Advertisement

முகாமில் 122 பயனாளிகளுக்கு ரூ 21.81 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

சிவகங்கை கோட்டாட்சியா் ஜெபி கிரேசியா, இளையான்குடி வட்டாட்சியா் நாகந்தினி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அலுவா் ராஜாசிங், மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.