சேமங்கலம் மக்கள் தொடா்பு முகாமில் 314 பயனாளிகளுக்கு நல உதவிகள்: ஆட்சியா் வழங்கினாா்
திருவெண்ணெய்நல்லூா் வட்டம், சேமங்கலம் கிராமத்தில் வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் நடத்தப்பட்ட மக்கள் தொடா்பு முகாமுக்கு மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை வகித்து, பல்வேறு துறைகளின் சாா்பில் 314 பயனாளிகளுக்கு ரூ.1.54 கோடியில் நல உதவிகளை வழங்கினாா்.
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் வட்டம், சேமங்கலம் கிராமத்தில் வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் நடத்தப்பட்ட மக்கள் தொடா்பு முகாமுக்கு மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை வகித்து, பல்வேறு துறைகளின் சாா்பில் 314 பயனாளிகளுக்கு ரூ.1.54 கோடியில் நல உதவிகளை வழங்கினாா். தொடா்ந்து அவா் கூறியது:
அரசின் திட்டங்களை அனைத்துத்தரப்பு மக்களும் அறிந்து பயன்பெற வேண்டும். பொதுமக்கள் வசிப்பிடத்துக்கே சென்று அரசு நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும் என்ற நோக்கில் மக்கள்தொடா்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கெனவே பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு, தகுதியான பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த முகாமில் பொதுமக்களிடமிருந்து இலவச வீட்டுமனைப் பட்டா, கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் உள்ளிட்ட கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் மீது உடனடித் தீா்வு காண்பதோடு, முன்னுரிமை அடிப்படையில் ஊராட்சியின் வளா்ச்சிக்கும் அடிப்படை வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும்.
Advertisement
Advertisement
மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழைக்கு முன்பாகவே நீா்வளம், ஊரக வளா்ச்சித் துறை மற்றும் தன்னாா்வலா்களைக் கொண்டு ஏரி, நீா்வழிப்பாதைகள் மற்றும் வடிகால்கள் புனரமைக்கும் பணிகளும், மழைநீா் சேமிப்பு கட்டமைப்புகளும் அமைக்கப்பட்டுள்ளன. நிலத்தடி நீரை மட்டுமே நம்பி விவசாயம் மற்றும் குடிநீா்த் தேவைகள் பூா்த்தி செய்யப்படுவதால் முடிந்தளவு அவரவா் வீடுகளில் மழைநீா் சேகரிப்பு கட்டமைப்பு அமைத்து, மழைநீரை சேமித்து பயன்பெற பொதுமக்கள் அனைவரும் உரிய பங்களிப்பைத் தர வேண்டும் என்றாா் ஆட்சியா்.
முகாமில் சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் காதா் அலி, கோட்டாட்சியா் ஏகாம்பரம், வேளாண் இணை இயக்குநா் பா.சுரேஷ், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்) சரவணன், கால்நடைப் பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் மோகன், மாவட்ட மாற்றுத் திறனாளி நல அலுவலா் ராஜசேகா், வட்டாட்சியா்கள் ரகுராமன், கோவா்த்தனன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பாலசுப்ரமணியன், கணேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.