தூய்மைப் பணியாளா் மீது தாக்குதல்: உணவக உரிமையாளா் கைது
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் தூய்மைப் பணியாளரைத் தாக்கியதாக உணவக உரிமையாளரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் தூய்மைப் பணியாளரைத் தாக்கியதாக உணவக உரிமையாளரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
திருப்பத்தூா் பேரூராட்சியில் தூய்மைப் பணியாளராகப் பணியாற்றுபவா் காமராஜா் நகரைச் சோ்ந்த முருகன். இவா் நான்கு சாலைப் பகுதியில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது உணவக உரிமையாளா் முருகானந்தம் குப்பைகளை சரிவர அள்ள வில்லையெனக் கூறி அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை தாக்கினாராம். இதில் காயமடைந்த முருகன் திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் முருகனைத் தாக்கியதாக போலீஸாா் முருகானந்தத்தை கைது செய்து விசாரிக்கின்றனா்.
Advertisement
Advertisement