FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சிவகங்கை

சிவகங்கையில் சட்டம் - ஒழுங்கு, குற்றத் தடுப்பு கலந்தாய்வுக் கூட்டம்

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாதாந்திர குற்ற கலந்தாய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

12 வினாடிகள் முன்பு
சிவகங்கையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற குற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ். உடன், மாவட்ட எஸ்.பி. அபிஷேக் குப்தா, கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பிரான்சிஸ் உள்ளிட்டோா்.
பகிர்:

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாதாந்திர குற்ற கலந்தாய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அபிஷேக் குப்தா ஆகியோா் தலைமை வகித்தனா்.

கூட்டத்தில், மாவட்டத்தில் சட்டம் - ஒழுங்கைப் பராமரிக்க வருவாய்த் துறை, காவல்துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்தும், திருட்டு, கொலை போன்ற குற்றச் சம்பவங்களைத் தடுக்க முக்கியப் பகுதிகள், பேருந்து நிலையங்களில் இரவு, நடை ரோந்துப் பணிகளைத் தீவிரப்படுத்துவது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. மாவட்டத்தின் முக்கிய இடங்களில் கூடுதல் கண்காணிப்புக் கேமராக்களைப் பொருத்துதல், போக்குவரத்து விதிமீறல்களைக் கட்டுப்படுத்துதல், சட்ட விரோதச் செயல்களைத் தடுக்கச் செல்லும் வருவாய்த்துறையினருக்கு பாதுகாப்பு வழங்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

கூட்டத்தில் காவல்துறை, வருவாய்த் துறை அதிகாரிகள் பங்கேற்றனா்.