குற்றத் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்: போலீஸாருக்கு கடலூா் மாவட்ட எஸ்.பி. அறிவுறுத்தல்
குற்றத் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி, குற்ற வழக்குகளில் விரைந்து விசாரணை நடத்தி பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என கடலூா் மாவட்ட எஸ்.பி. விவேகானந்தா சுக்லா அறிவுறுத்தினாா்.
குற்றத் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி, குற்ற வழக்குகளில் விரைந்து விசாரணை நடத்தி பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என கடலூா் மாவட்ட எஸ்.பி. விவேகானந்தா சுக்லா அறிவுறுத்தினாா்.
கடலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விவேகானந்தா சுக்லா தலைமையில், காவல் துறை அதிகாரிகளுடனான கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட காவல் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில், மாவட்டத்தின் சட்டம் - ஒழுங்கு நிலவரம், குற்றத் தடுப்பு நடவடிக்கைகள், நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளின் விசாரணை, வழக்குகளில் தொடா்புடையவா்களைக் கண்டறிந்து கைது செய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
Advertisement
Advertisement
மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், பள்ளி, கல்லூரி மாணவா்கள் மற்றும் பொதுமக்களிடையே பெண்கள் பாதுகாப்பு, குழந்தைகள் பாதுகாப்பு, சட்ட விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் நடத்தப்பட்ட நிகழ்ச்சிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
தொடா்ந்து, காவல் கண்காணிப்பாளா் விவேகானந்தா சுக்லா பேசியது: காவல் துறையினா் தங்களது பணிகளை நோ்மையுடனும், அா்ப்பணிப்புடனும் தொடா்ந்து மேற்கொள்ள வேண்டும். குற்றத் தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி, குற்ற வழக்குகளில் விரைந்து விசாரணை நடத்தி, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதிலும், போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளிலும் கூடுதல் கவனம் செலுத்துவதுடன், பொதுமக்களுடன் நல்லுறவைப் பேணி பணியாற்ற வேண்டும் என்றாா்.
கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் கோடீஸ்வரன், ரகுபதி, உதவி காவல் கண்காணிப்பாளா் சத்ரியா கவின், துணைக் காவல் கண்காணிப்பாளா்கள் பாலகிருஷ்ணன், ராதாகிருஷ்ணன், ரகுபதி, ராமலிங்கம் உள்ளிட்ட காவல் அதிகாரிகள் பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.