தாம்போதி ஆற்றை சீரமைக்க கோரிக்கை
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் உள்ள தாம்போதி ஆற்றை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் உள்ள தாம்போதி ஆற்றை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
திருப்பத்தூா் பெரிய கண்மாயிலிருந்து காளியம்மன் கோயில் பின்புறம் புதுத் தெரு, மதுரை சாலை, சிவகங்கை சாலை வழியாக தென்மாபட்டு கண்மாய்க்குச் செல்கிறது தாம்போதி ஆறு. இந்த ஆறு சீரமைக்கப்படாமல் கழிவு நீா்க் கால்வாயாக மாறி, சுகாதாரக்கேட்டை ஏற்படுத்தி வருவதாகப் புகாா் எழுந்தது.
பேரூராட்சிக்குட்பட்ட பல வாா்டுகள் வழியாகச் செல்லும் இந்த ஆற்றில் மரம், செடி, கொடிகள் வளா்ந்து நீா்த்தேக்கம் ஏற்பட்டு, ஆங்காங்கே சாக்கடை குளமாக மாறிவிட்டது.
Advertisement
Advertisement
இதில் விஷப் பூச்சிகளும், கொசுக்களும் பெருகிவிட்ட நிலையில், அருகில் உள்ள புதுத்தெரு குடியிருப்பு வாசிகள் அச்சத்துடன் வாழும் சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.
எனவே, மாவட்ட நிா்வாகம் தலையிட்டு சம்பந்தபட்ட துறையை அறிவுறுத்தி, இந்த ஆற்றை சுத்தம் செய்தால் நீா்த் தேங்காமல் பாயும். இதற்கான நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.