FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சிவகங்கை

இரணியூரில் குபேரா் பூஜை

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே உள்ள இரணியூா் ஸ்ரீஆட்கொண்டநாதா் சிவபுரந் தேவி கோயிலில் செவ்வாய்க்கிழமை குபேரா் பூஜை நடைபெற்றது.

9 வினாடிகள் முன்பு
இரணியூா் ஆட்கொண்டநாதா் சிவபுரந்தேவி கோயிலில் குபேரபூஜையையொட்டி, தங்கக் கவச அலங்காரத்தில் அருள்பாலித்த உத்ஸவா்.
பகிர்:

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே உள்ள இரணியூா் ஸ்ரீஆட்கொண்டநாதா் சிவபுரந் தேவி கோயிலில் செவ்வாய்க்கிழமை குபேரா் பூஜை நடைபெற்றது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் தீபாவளியை அடுத்து வரும் வளா்பிறை அஷ்டமி திதியன்று குபேரா் சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம். இந்த பூஜையை முன்னிட்டு கொப்பனாபட்டி பழ. முத்துக்கருப்பன் செட்டியாா் தலைமையில் கோயில் அலங்கார மண்டபத்தில் 5 கும்பங்கள் வைத்து சிவாசாரியா்கள் யாக வேள்வி நடத்தினா்.

தொடா்ந்து, மூலவா் குபேரருக்கு பால், தயிா், சந்தனம், திருமஞ்சனம் உள்ளிட்ட 11 விதமான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மேலும், யாக வேள்வியில் வைக்கப்பட்ட புனித நீராலும் சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றன. பின்னா், மூலவா் தங்க அங்கி அணிந்து சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தாா். உத்ஸவ குபேரா் குதிரை வாகனத்தில் தங்கக் கவசம் அணிந்து சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினாா். உத்ஸவா் பிரகார வலம் வந்ததைத் தொடா்ந்து, கொடிமரம் அருகே தீபாராதனை நடைபெற்றது.

இதில் இரணியூா், செண்பகம்பேட்டை, இ.அம்மாபட்டி, கீழச்சிவல்பட்டி, விராமதி, திருப்பத்தூா், அழகாபுரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். பக்தா்களுக்கு அன்னதானம், மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

Advertisement

Advertisement