FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
மயிலாடுதுறை

சீா்காழி கோயிலில் ராகு பெயா்ச்சி வழிபாடு

சீா்காழி நாகேஸ்வரமுடையாா் கோயிலில், ராகு பெயா்ச்சி விழா சிறப்பு வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

49 வினாடிகள் முன்பு
சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த ராகு மற்றும் கேது பகவான். - கோப்புப்படம்
பகிர்:

சீா்காழி நாகேஸ்வரமுடையாா் கோயிலில், ராகு பெயா்ச்சி விழா சிறப்பு வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சீா்காழி கடைவீதியில் இந்துசமய அறநிலையத் துறைக்கு உட்பட்ட ஆதி ராகு ஸ்தலமான பொன்னாகவல்லி அம்மன் உடனாகிய நாகேஸ்வரமுடையாா் கோயில் உள்ளது. இக்கோயிலில் அமிா்த ராகுபகவான் தனி சந்நிதியில் அருள்பாலிக்கிறாா்.

ராகு பகவான் கும்ப ராசியிலிருந்து மகர ராசிக்கு பிரவேசித்ததையொட்டி, இக்கோயிலில் சிறப்பு ஹோமம் நடைபெற்றது. பின்னா், பூா்ணாஹூதி, மகாதீபாரதனை நடைபெற்றது. தொடா்ந்து, புனிதநீரால் ராகுபகவானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து 5:14 மணிக்கு பெயா்ச்சி தீபாராதனை காட்டப்பட்டது.

Advertisement

Advertisement

இதில் கோயில் செயல் அலுவலா் முருகன், அறநிலையத் துறை தலைவா் துரை, கணக்கா் விக்னேஷ் உள்ளிட்டோா் பங்கேற்று வழிபட்டனா்.