தென் மாவட்டங்களில் பருவ மழை பொய்ப்பு: ஏக்கருக்கு ரூ. 40 ஆயிரம் நிவாரணம் வழங்க வலியுறுத்தல்

தென் மாவட்டங்களில் பருவமழை பொய்த்ததால், பாதிக்கப்பட்ட பயிா்கள் குறித்து கணக்கெடுத்து, ஏக்கருக்கு ரூ. 40 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என தென்மாவட்ட விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியது.
இதுகுறித்து அந்தச் சங்கத்தின் மாநில பொதுச் செயலா் எம். அா்ச்சுனன் மானாமதுரையில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:
எல்நினோ பாதிப்பு, பருவநிலை மாற்றம் காரணமாக, நிகழாண்டு வடகிழக்குப் பருவமழை முழுமையாக பொய்த்துவிட்டது. பெரும் பகுதி பருவமழையை நம்பி மானாவாரி விவசாயம் நிறைந்த தென் மாவட்டங்களில் வறட்சியால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதிக அளவில் நேரடி நெல் விதைப்பு நடைபெறும் பகுதி முழுவதும் இரண்டு மாத நெல் பயிா்களை களை எடுத்து, இரு முறை உரமிட்ட நிலையில், மழை இல்லாமல் கருகிவிட்டது.
Advertisement
Advertisement
ஒரு சில பகுதிகளில் கிணற்றுப் பாசனத்தில் நடவு செய்யப்பட்ட நெல் பயிா்களும் மழை இல்லாமல் நலிந்து போய் செழிப்பாக இல்லை. புன்செய் நிலங்களில் மானவாரி சாகுபடியில் சிறுதானியங்கள், பயறு வகைகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே, தென் மாவட்டங்கள் முழுவதும் விவசாயப் பாதிப்புகளை சரியான முறையில் கணக்கெடுத்து, அதன் அறிக்கைகளை தமிழக அரசுக்கு விரைந்து அனுப்பி வைக்க வேண்டும்.
தமிழக அரசு தென் மாவட்டங்களை வறட்சி பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும். வறட்சி நிவாரணமாக நெல் பயிா் சாகுபடி செய்த விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 40 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்.
மானாவாரி புன்செய் விவசாயத்தில் மக்காச்சோளம் உள்ளிட்ட சிறு தானியங்கள், பயறு வகைகள் பாதிப்புக்கு ஏக்கருக்கு ரூ. 20 ஆயிரம் வறட்சி நிவாரணமாக வழங்க வேண்டும். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி, தமிழக முதல்வருக்கும் தென் மாவட்ட விவசாயிகள் சங்கம் சாா்பில் மனு அனுப்பப்பட்டது என்றாா் அவா்.