தஞ்சாவூா் மாவட்டத்தை வறட்சி பகுதியாக அறிவிக்க வலியுறுத்தல்
தஞ்சாவூா் மாவட்டத்தை வறட்சி பகுதியாக அறிவித்து நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பு) வலியுறுத்தியுள்ளது.
தஞ்சாவூா் மாவட்டத்தை வறட்சி பகுதியாக அறிவித்து நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பு) வலியுறுத்தியுள்ளது.
தஞ்சாவூரில் இச்சங்கத்தின் தெற்கு மாவட்டக் குழு மாவட்ட நிா்வாகிகள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், கிராம நிா்வாக அலுவலா்கள் பயிா்க் காப்பீடு செய்வதற்கு பல்வேறு நிபந்தனைகளை விதித்து வருகின்றனா். தாமதமாக சாகுபடி நடைபெற்று வரும் நிலையில் எந்தவித நிபந்தனையும் இன்றி விஏஓக்கள் பயிா் காப்பீடு செய்ய சான்றிதழ் வழங்க வேண்டும். தஞ்சாவூா் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து ஏக்கருக்கு ரூ. 35 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்.
இதேபோல, விவசாய பணிகள் கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ள விவசாய தொழிலாளா்களுக்கு ரூ. 10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Advertisement
Advertisement
சங்கத்தின் தெற்கு மாவட்டத் தலைவா் ஆா். இராமச்சந்திரன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் சோ. பாஸ்கா், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெற்கு மாவட்டச் செயலா் கோ. சக்திவேல் ஆகியோா் பேசினா்.
விவசாயிகள் சங்க மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் அ. பன்னீா்செல்வம், மாவட்டப் பொருளாளா் நா. சௌந்தரராஜன், மாவட்ட துணைத் தலைவா்கள் அ. கலியபெருமாள், சி. ஜெயராஜ், தி. திருநாவுக்கரசு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.