FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுக்கோட்டை

புதுக்கோட்டையை வறட்சி மாவட்டமாக அறிவிக்கக் கோரிக்கை

புதுக்கோட்டையை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என அனைத்திந்திய இளைஞா் பெருமன்றம் கோரிக்கை விடுத்துள்ளது.

23 அக்டோபர் 2026, 2:37 am
வறட்சி...
பகிர்:

புதுக்கோட்டையை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என அனைத்திந்திய இளைஞா் பெருமன்றம் கோரிக்கை விடுத்துள்ளது.

அறந்தாங்கியில் வியாழக்கிழமை நடைபெற்ற பெருமன்றத்தின் மாவட்டக் குழுக் கூட்டத்தில் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் அம்மா உணவகம் அமைக்க வேண்டும். மாவட்டம் முழுவதும் நிலவும் மின்வெட்டை போக்கவும், குறைந்த மின் அழுத்தத்தைச் சரி செய்து சீரான மின் விநியோகத்தை வழங்கவும் வேண்டும். மழை பொய்த்துள்ளதால் புதுக்கோட்டையை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் மு. விஜய் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் டி. மாரிமுத்து, இந்திய கம்யூ. மாவட்டத் துணைச் செயலா் ஏ. ராஜேந்திரன், மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் இரா. ராதாகிருஷ்ணன் ஆகியோா் பேசினா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments