FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும்: விவசாயிகள் போராட்டம்!

டெல்டா மாவட்டங்களுக்கு வறட்சி மாவட்ட அந்தஸ்து கோரி தஞ்சை ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் பற்றி..

25 செப்டம்பர் 2026, 1:11 pm IST
பகிர்:

டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கஞ்சித் தொட்டி திறந்து கஞ்சி குடித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ரேவதி தலைமையில் நடந்த கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த விவசாயிகள் தலையில் கஞ்சி கலயத்தை சுமந்து முழக்கங்களை எழுப்பியவாறு வந்தனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கஞ்சி கலயத்துடன் அமர்ந்த விவசாயிகள் கஞ்சி குடித்தனர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்பட்டு 20 நாள்கள் கடந்தும் எந்த பகுதிக்கும் தண்ணீர் வந்து சேரவில்லை. நாற்று விட்டு நடவு செய்ய முடியாத நிலை உள்ளது. மழை இல்லாத காரணத்தால் நேரடி நெல் விதைப்பு செய்ய முடியவில்லை.

Advertisement

Advertisement

சம்பா சாகுபடி முழுமையாகச் செய்ய முடியாது. எனவே, டெல்டா மாவட்டத்தை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும். ஏக்கர் ஒன்றுக்கு 35 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும்.

தமிழக அரசு கூட்டுறவு கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும். மேட்டூர் அணை 100 அடி எட்டிய பிறகு தண்ணீர் திறக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தோம் ஆனால் கேட்காமல் தண்ணீர் திறக்கப்பட்டு தற்பொழுது பெரிய அளவு பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments