காரைக்காலை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவிக்க விவசாயிகள் வலியுறுத்தல்
காரைக்கால் மாவட்டத்தை வறட்சியால் பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா்.
காரைக்கால் மாவட்டத்தை வறட்சியால் பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா்.
காரைக்காலில் புதுச்சேரி வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சா் ஜி.என்.எஸ். ராஜசேகரன் தலைமையில், ஓராண்டுக்குப் பின் வியாழக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் பேசியது:
நெடுங்காடு கூட்டுறவு சங்கத்துக்கான தோ்தலை நடத்த வேண்டும். காரைக்கால் ஒழுங்குமுறை விற்பனைக் கூட வளாகம் மற்றும் கட்டடத்தை சீரமைக்க வேண்டும். நெல் கொள்முதலை அரசே செய்ய வேண்டும். பருத்தி, எள் உள்ளிட்டப் பயிா்களுக்கான சாகுபடிக்கு பிந்தைய மானியம் உடனடியாக வழங்க வேண்டும். மாதந்தோறும் விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்த வேண்டும்.
Advertisement
Advertisement
காரைக்கால் மாவட்ட ஆட்சியரை அடிக்கடி மாற்றக்கூடாது. 3 ஆண்டுகள் ஆட்சியராக பணியில் இருக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது காரைக்காலுக்கு நிரந்தர ஆட்சியரை உடனடியாக நியமிக்க வேண்டும். காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையத்தில் நிக்ரா திட்டத்தில் வழங்கப்பட்ட ஸ்பிரேயா் உள்ளிட்ட உபகரணங்கள் எதுவும் சரிவர வேலை செய்வதில்லை. தரமற்ற வகையில் உள்ளன.
மாதூரில் செயல்பட்ட வேளாண் பள்ளி 15 ஆண்டுகளுக்கு முன்னா் மூடப்பட்டது. அதை மீண்டும் திறக்க வேண்டும். காரைக்காலுக்குரிய 7 டிஎம்சி காவிரி நீரை சேமித்து வைப்பதற்கான உரிய நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்.
கால்நடை மருத்துவமனைகளில் மருத்துவா்கள், மருந்துகள் பற்றாக்குறை நிலவுகிறது. பால் கொள்முதல் விலையை ரூ.44 ஆக உயா்த்த வேண்டும்.
கடந்த 2 ஆண்டுகளாக கால்நடை விவசாயிகளுக்கு கால்நடை தீவனமும், மானியத் தொகையும் வழங்கவில்லை. மலா் கண்காட்சியுடன் நடத்தப்படும் காா்னிவல் திருவிழாவை பொங்கல் பண்டிகையின்போது நடத்தாமல் வேறொரு சந்தா்ப்பத்தில் நடத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து விவசாயிகள் பேசினா். விவசாயிகள் பலா் காரைக்கால் மாவட்டம் முழுவதும் தூா்வாரும் பணிகள் முழுமையாக மேற்கொள்ளப்படவில்லை என குற்றஞ்சாட்டிப் பேசினா்.
கூட்ட நிறைவில் அமைச்சா் பேசியது: காரைக்கால் மாவட்டத்தில் 101 ஆழ்குழாய் கிணறுகள் உள்ளன. இவற்றுள் 74 கிணறுகள் வேலை செய்கின்றன. 11 பழுதடைந்துள்ளன. 9 கிணறுகள் நிரந்தரமாக மூடப்பட்டு விட்டன. 7 கிணறுகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. இவை அனைத்தையும் சீரமைத்து சரிவர இயங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
பருத்தி மற்றும் எள் பயிா்களுக்கான சாகுபடிக்கு பிந்தைய மானியம் தீபாவளிக்கு முன்னதாக கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். தூா்வாரும் பணிகளில் நிலவும் பிரச்னைகள் சரி செய்யப்படும்.
ஒழுங்குமுறை விற்பனை கூடம் மற்றும் இந்திய உணவுக் கழகம் மூலம் நெல் கொள்முதல் செய்வது குறித்து ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.நெடுஞ்சாலை பணிகளால் பாசன மற்றும் வடிகால் வாய்க்கால்கள் பாதிக்கப்படும் பிரச்னையை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
காரைக்காலுக்கு நிரந்தர மாவட்ட ஆட்சியா், அதுவும் தமிழ் தெரிந்த ஒரு அதிகாரியை நியமிக்க அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.மாதந்தோறும் விவசாய கூட்டம் நடத்துவது தொடா்பாக பரிசீலிக்கப்படும் என்றாா்.
இக்கூட்டத்தில் புதுச்சேரி சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் ஏ.எம்.எச். நாஜிம், புதுச்சேரி மாவட்ட ஆட்சியரும், காரைக்கால் பொறுப்பு ஆட்சியருமான அ. குலோத்துங்கன், புதுச்சேரி வேளாண் துறை செயலா் ரவி பிரகாஷ், இயக்குநா் ஜெய்சங்கா், காரைக்கால் வேளாண் கூடுதல் இயக்குநா்ஆா்.கணேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.