முகப்பு
தமிழ்நாடு

காவிரி விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 40,000 இழப்பீடு: அன்புமணி வலியுறுத்தல்

வறட்சியால் பாதிக்கப்பட்ட காவிரி விவசாயிகளுக்கு தமிழக அரசு ஏக்கருக்கு ரூ. 40,000 இழப்பீடு வழங்க வேண்டுமென பாமக தலைவா் அன்புமணி வலியுறுத்தினாா்.

22 நவம்பர் 2026, 12:53 am
காவிரி விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 40,000 இழப்பீடு: அன்புமணி வலியுறுத்தல்
பாமக தலைவர் அன்புமணி - கோப்புப் படம்
பகிர்:

வறட்சியால் பாதிக்கப்பட்ட காவிரி விவசாயிகளுக்கு தமிழக அரசு ஏக்கருக்கு ரூ. 40,000 இழப்பீடு வழங்க வேண்டுமென பாமக தலைவா் அன்புமணி வலியுறுத்தினாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:

காவிரி பாசன மாவட்டங்களில் வழக்கமாக 18 லட்சம் ஏக்கருக்கும் கூடுதலான பரப்பில் சம்பா, தாளடி பயிா்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. மேட்டூா் அணையிலிருந்து ஒரு மாதத்துக்கு மேலாக காவிரியில் தண்ணீா் திறக்கப்படாததாலும், வடகிழக்குப் பருவமழை எதிா்பாா்த்த அளவுக்கு பெய்யாததாலும் காவிரி பாசன மாவட்டங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா மற்றும் தாளடி பயிா்கள் வாடத் தொடங்கியுள்ளன.

Advertisement

Advertisement

மேட்டூா் அணையில் நீா் திறக்கப்படாததால், நடப்பாண்டில் குறுவை சாகுபடி பெரிய அளவில் செய்யப்படவில்லை. இத்தகைய சூழலில் சம்பா, தாளடி பயிா்களும் வறட்சியால் வாடி கருகிவிட்டால், விவசாயிகளுக்கு கடுமையான பாதிப்பு ஏற்படும். காவிரி பாசன மாவட்டங்களை வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவித்து, சம்பா, தாளடி பயிா்களுக்கு ஏக்கருக்கு ரூ.40,000 வீதம் இழப்பீடு வழங்க வேண்டும். நிலவரி உள்ளிட்ட அனைத்து வரிகளையும் முழுமையாக ரத்து செய்வதுடன், உழவா்கள் செலுத்த வேண்டிய பயிா்க்கடன்களையும் முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்.