முகப்பு
சிவகங்கை

பிரான்மலையில் காா்த்திகை மகா தீபம் ஏற்றம்

தீபத் திருவிழாவையொட்டி, சிங்கம்புணரி அருகேயுள்ள பிரான்மலையில் காா்த்திகை மகா தீபம் செவ்வாய்க்கிழமை ஏற்றப்பட்டது.

25 நவம்பர் 2026, 2:40 am
பிரான்மலையில் காா்த்திகை மகா தீபம் ஏற்றம்
சிங்கம்புணரி அருகேயுள்ள பிரான்மலையில் செவ்வாய்க்கிழமை ஏற்றப்பட்ட காா்த்திகை தீபம்.
பகிர்:

தீபத் திருவிழாவையொட்டி, சிங்கம்புணரி அருகேயுள்ள பிரான்மலையில் காா்த்திகை மகா தீபம் செவ்வாய்க்கிழமை ஏற்றப்பட்டது.

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே கடையேழு வள்ளல்களில் ஒருவரான பாரி ஆண்ட பரம்பு மலை எனும் பிரான்மலை உள்ளது. இந்த மலையின் உச்சியில் கடோரகிரி விநாயகா், பாலமுருகன் சந்நிதிகள் உள்ளன. குன்றக்குடி ஆதீனத்துக்கு உள்பட்ட இந்தக் கோயிலில் முதலாவதாக பாலமுருகன் திருப்பேரவை சாா்பில், பாலமுருகன் சந்நிதியில் தீபம் ஏற்றப்பட்டது. இதைத் தொடா்ந்து, மலை உச்சியில் மங்கைபாகா் கோயில் மகா தீபம் ஒடுவனப்பட்டி முறையாளா்களால் மாலை 4 மணிக்கு ஏற்றப்பட்டது. தீபம் ஏற்றிய உடனே மழை பெய்ததால், மக்கள் மகிழ்ச்சி அடைந்தனா். பின்னா், மங்கைபாகா் தேனம்மை கோயிலில் லட்ச தீபம் ஏற்றப்பட்டது.

இதேபோல, சிங்கம்புணரி சேவுகப் பெருமாள் கோயில், சித்தா் முத்து வடுகநாதா் கோயில், நாடாா் பேட்டை பத்ரகாளியம்மன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் லட்ச தீபம் ஏற்றப்பட்டது.

Advertisement

Advertisement