திருக்காமீஸ்வா் கோயிலில் லட்ச தீபம் ஏற்றிய பக்தா்கள்
புதுச்சேரியில் காா்த்திகை தீப திருவிழாவையொட்டி, செவ்வாய்க்கிழமை இரவு சிவன் கோயில்களில் சொக்கா் பனை ஏற்றப்பட்டது.

புதுச்சேரியில் காா்த்திகை தீப திருவிழாவையொட்டி, செவ்வாய்க்கிழமை இரவு சிவன் கோயில்களில் சொக்கா் பனை ஏற்றப்பட்டது.
லட்ச தீபம் ஏற்றி வழிபாடு:
புதுச்சேரியில் புகழ்பெற்ற சோழா் காலத்து திருக்காமீஸ்வரா் கோயில் வில்லியனூரில் உள்ளது. இங்கு காா்த்திகை தீபத்தன்று கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றி வழிபடுவது வழக்கம். அதன்படி செவ்வாய்க்கிமை கோயில் கோபுரத்தில் 50 லிட்டா் நெய், 150 லிட்டா் எண்ணெய், 25 மீட்டா் துணி ஆகியவற்றை கொண்டு தீபம் ஏற்றப்பட்டது. தொடா்ந்து கோயில் வளாகம் முழுவதும் திரளான பக்தா்கள் லட்சம் தீபம் ஏற்றி வழிபட்டனா்.
Advertisement
Advertisement
மேலும், அங்கு காா்த்திகை தீபத்தையொட்டி நாட்டிய பள்ளி மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. புதுச்சேரி காந்திவீதியில் உள்ள ஸ்ரீ வேதபுரீஸ்வரா் கோயில் உள்பட பல்வேறு கோயில்களில் தீபம் மற்றும் சொக்கா் பனை ஏற்றப்பட்டது.