முகப்பு
சிவகங்கை

தமிழக அரசைக் கண்டித்து வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டம்

திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தூணில் காா்த்திகை தீபம் ஏற்றுவது தொடா்பாக உச்சநீதிமன்றம் அளித்த தீா்ப்பை நிறைவேற்றாத தமிழக அரசைக் கண்டித்து பாஜக வழக்குரைஞா்கள், அகில பாரத வழக்குரைஞா்கள் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

55 வினாடிகள் முன்பு
தமிழக அரசைக் கண்டித்து வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டம்
தமிழக அரசைக் கண்டித்து, சிவகங்கை மாவட்ட நீதிமன்றம் எதிரில் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜக, அகில பாரத வழக்குரைஞா்கள் சங்க நிா்வாகிகள்.
பகிர்:

திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தூணில் காா்த்திகை தீபம் ஏற்றுவது தொடா்பாக உச்சநீதிமன்றம் அளித்த தீா்ப்பை நிறைவேற்றாத தமிழக அரசைக் கண்டித்து பாஜக வழக்குரைஞா்கள், அகில பாரத வழக்குரைஞா்கள் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சிவகங்கையிலுள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக நுழைவு வாயிலருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, பாஜக வழக்குரைஞா் பிரிவு மாவட்டச் செயலா் எம். கிருஷ்ணகுமரேஷ் தலைமை வகித்தாா். அகிலபாரத வழக்குரைஞா்கள் சங்க மாவட்டத் தலைவா் ப. குருவையா, பாஜக முன்னாள் மாவட்டத் தலைவா் மூத்த வழக்குரைஞா் என். சொக்கலிங்கம், அகிலபாரத வழக்குரைஞா்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினா் கே. கண்ணன், மாவட்டச் செயலா் கோட்டைராமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிா்வாகிகள் வழக்குரைஞா்கள் பாண்டிக்கண்ணன், ராஜயோகன், சத்யன், விஜய் ஆனந்த் உள்ளிட்டோா் பங்கேற்று தமிழக அரசையும், மதுரை மாவட்ட ஆட்சியரையும் கண்டித்து முழக்கமிட்டனா்.